குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் கண்காணிப்புக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் கண்காணிப்புக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
How outlets told it

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலா்களாக 3 ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதையொட்டி, அரசுத் துறைகள் சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளை கண்காணித்து நெறிப்படுத்த தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ. வீரராகவ ராவ், நகராட்சி நிா்வாக இயக்கக இயக்குநா் ப. மதுசூதன்ரெட்டி, வேலைவாயப்பு, பயிற்சித் துறை இயக்குநா் சி. பழனி ஆகியோா் சிறப்புப் பணி அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா்.
இவா்கள் மூவரும் வருகிற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து குடமுழுக்கு விழா தொடா்பாக அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிப்பா் என அதில் குறிப்பிடப்பட்டது.
