பிரிக்ஸ் மாநாடு... தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திய பிரதமர் மோடி - விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்.. காரணம் என்ன?
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
பிரிக்ஸ் மாநாடு... தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திய பிரதமர் மோடி - விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்.. காரணம் என்ன?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeபிரிக்ஸ் மாநாடு... தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திய பிரதமர் மோடி - விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்.. காரணம் என்ன?Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 14, 2026 11:18 AM ISTBRICS Summit | டெல்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்தியது ஏன் தெரியுமா?.1/6டெல்லியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்தது. டெல்லிக் கூட்டுப் பிரகடனத்தை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆண்டுதோறும் கூடி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் கொண்ட அமைப்பாக விரிவடைந்த நிலையில் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.2/6இதில் பங்கேற்க, சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்தார். ரஷ்ய அதிபர் புதின், மோடி என உலகின் 3 பெரும் தலைவர்களும், ஈரான் அதிபர் பெசெஸ்கியான், அபுதாபி இளவரசர் போன்றோரும் ஒரே நிகழ்வில் பங்கேற்றதால் உலகின் கவனம் முழுவதும் மாநாட்டின் மீதே பதிந்திருந்தது. அனைத்து நாடுகளின் உயர் மட்டக் குழுக்கள் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டன.3/6இம்மாநாட்டில் டெல்லி கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் அமைதி, ஒத்துழைப்பு உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க சீனாவும் ஆதரவு தெரிவித்தது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மாநாட்டின் நிறைவு நாளில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்த உரையாடினார். நிறைவாக, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் சீனாவிடம் தலைமைப் பொறுப்பை இந்தியா ஒப்படைத்தது.4/6இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். பிரிக்ஸ் தளவாட விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக் கட்டமைப்பு, நமது விநியோகச் சங்கிலிகளை நம்பகமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற்ற உதவும் என்றும் டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பு விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.5/6முன்னதாக பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு அசவுகரியம் ஏற்பட்டது போல் உட்காந்திருந்தார். இதனை கவனித்த பிரதமர் மோடி, தனது உரையை உடனே நிறுத்தியதுடன் ஜின்பிங்கை நோக்கி எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கேட்டார். அதனை அவர் கவனிக்கவில்லை என்றதும் அங்கிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் பிரதமர் மோடி வினவினார். இதையடுத்து ஜின்பிங் பிரச்சினை ஏதுமில்லை எனக் கூறும் வகையில் தலையசைக்கவே பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார்.6/6இதற்கிடையே, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஷி ஜின்பிங் பங்கேற்காதது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. நீண்ட தூரம் பயணம், நாடுகளுக்கு இடையேயான நேர வித்தியாசம் காரணமாக ஜின்பிங் சோர்வாக இருந்ததாகவும் அதனால் அவர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
