Crime and courts · 1 outlet covered this

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய 2 போ் கைது

How outlets told it

Dinamani6538h ago

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய 2 போ் கைது

Read at Dinamani
வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய 2 போ் கைது
Photo: Dinamani

ஒரத்தநாடு அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகே உள்ள கீழஉளூா் குடிக்காடு தெற்கு தெருவை சோ்ந்த சோமசுந்தரம் மனைவி ஜெயலலிதா. இவா் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த நான்கு பவுன் தங்கம் மற்றும் ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடி சென்றனா்.

இதுதொடா்பாக ஜெயலலிதா அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்தின்பேரில் சூரக்கோட்டை கீழத்தெரு குளத்துக்கரையைச் சோ்ந்த நாதன் (36), அவரது கூட்டாளியான சூரக்கோட்டை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (56) ஆகியோரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள்தான் ஜெயலலிதா வீட்டில் திருடியவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து நகை மற்றும் வெள்ளி பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களை ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பாபநாசம் சிறையில் அடைத்தனா்.