தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சவுக்கு சங்கருக்கு பரோல் \n
Read at Daily ThanthiCrime and courts · 1 outlet covered this
தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சவுக்கு சங்கருக்கு பரோல் \n
How outlets told it

சென்னை, பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சவுக்கு சங்கரின் தாயார் கமலா பெங்களூருவில் உடல்நிலை குறைவால் நேற்று காலமானார். வயது மூப்பு மற்றும் தொடர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். சவுக்கு சங்கர் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பரேல் கிடைத்துள்ளது.
