வட சென்னையின் மூச்சுக்காற்று... கானா இசை தமிழ் சினிமாவைக் கைப்பற்றிய கதை தெரியுமா..?
Read at News18 TamilAccidents · 1 outlet covered this
வட சென்னையின் மூச்சுக்காற்று... கானா இசை தமிழ் சினிமாவைக் கைப்பற்றிய கதை தெரியுமா..?
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeவட சென்னையின் மூச்சுக்காற்று... கானா இசை தமிழ் சினிமாவைக் கைப்பற்றிய கதை தெரியுமா..?Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 11:16 AM ISTவடசென்னையின் தொழிலாளர் குடியிருப்புகளில் உருவான கானா இசை, மக்களின் அன்றாட வாழ்க்கையையும் சமூகக் கருத்துகளையும் பிரதிபலிக்கிறது. சினிமா மற்றும் மக்கள் இசை மேடைகளில் கானா புதிய பரிமாணங்களை அடைந்துள்ளது.1/5துறைமுகம், மில்கள், தொழிற்சாலைகள் என உடல் உழைப்பை மையமாகக் கொண்ட வடசென்னையின் தொழிலாளர் குடியிருப்புகளில் கானாவின் ஆரம்ப வடிவங்கள் உருவாகின. முதலில் இறப்பு வீடுகளில் துக்கத்தை வெளிப்படுத்தவும், மறைந்தவரின் வாழ்க்கையை நினைவுகூரவும் பாடப்பட்ட இது, பின்னர் திருவிழா, பிறந்தநாள், தெருமுனைக் கொண்டாட்டம் என விரிந்தது. டப்பா, தட்டு, மேஜை, கைதட்டல், காலடி ஓசை போன்ற எளிய பொருட்களே அதன் இசைக்கருவிகளாகின.2/5கானாவின் மொழியும் சென்னையின் பல்வேறு சமூகங்களின் கலவையை பிரதிபலித்தது. தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் சொற்கள் கலந்த ‘மெட்ராஸ் பாஷை’ அதன் தனித்துவமான அடையாளமாக மாறியது. தெருவில் மக்கள் பேசும் மொழியே பாடல்களின் வரிகளானது. ஆட்டோ, டீக்கடை, காதல், வேலை, வறுமை, நெரிசல் என அன்றாட வாழ்க்கையின் பல அனுபவங்களும் கானாவில் பதிவாகின. இதனால் அது மக்களின் வாழ்வை நேரடியாகப் பேசும் இசையாக உருவெடுத்தது.3/5சினிமாவில் கானாவின் மொழியும் இசைச் சாயலும் முன்பே இடம்பெற்றிருந்தாலும், 1990-களில் இசையமைப்பாளர் தேவாவின் வருகை அதன் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. ‘லாலாக்கு டோல் டப்பிமா’ போன்ற பாடல்கள் மூலம் சென்னை தெருக்களின் தாளத்தையும் மெட்ராஸ் பாஷையையும் வணிக சினிமாவின் மையத்துக்கு அவர் கொண்டு வந்தார். இதனால் கானா தனித்த இசை அடையாளமாக ரசிகர்களிடம் வலுவாக நிலைபெற்றது. பின்னர் கானா உலகநாதன் போன்ற கலைஞர்களின் குரல்களும் சினிமாவில் கவனம் பெற்றன.4/5அதன்பிறகு சந்தோஷ் நாராயணன், பா. இரஞ்சித் போன்ற கலைஞர்களின் படைப்புகளில் கானா புதிய பரிணாமத்தை சந்தித்தது. வடசென்னையின் வாழ்க்கை, அடையாளம், சாதி, சமத்துவம், அரசியல், உரிமை போன்ற சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் அது பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ‘அட்டகத்தி’ போன்ற படைப்புகள் கானாவை கதாபாத்திரங்களின் வாழ்வோடு நெருக்கமாக இணைத்தன. இதனால் தெருவின் இசை திரையில் வெறும் கொண்டாட்டப் பாடலாக இல்லாமல், ஒரு சமூகத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்கியது.5/5சினிமாவைத் தாண்டி கானாவுக்கு புதிய மேடைகளும் உருவாகின. ‘மார்கழியில் மக்கள் இசை’ போன்ற நிகழ்ச்சிகள், வழக்கமான மார்கழி இசைச் சூழலுக்கு மாற்றாக கானா, ஒப்பாரி, பறை, நாட்டுப்புற இசை, ராப் உள்ளிட்ட மக்கள் இசை வடிவங்களை ஒரே மேடையில் கொண்டு வந்தன. கானா கலைஞர்கள் சினிமா பாடல்களை மட்டும் பாடுவதைத் தாண்டி, சாதி, சமத்துவம், உரிமை, சமூக அநீதி, எதிர்ப்பு போன்ற அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளையும் பாடல்களாக முன்வைத்தனர்.
