பிலிப்பின்ஸ்: பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு
Read at DinamaniWorld · 2 outlets covered this
பிலிப்பின்ஸ்: பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு
How outlets told it
பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்து; பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு
Read at Daily Thanthi
பிலிப்பின்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.
தலைநகா் மணிலாவிலிருந்து 132 பேருடன் தென்மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள கொரான் நகருக்குப் புறப்பட்ட இந்தப் படகு, கடந்த புதன்கிழமை இரவு இலக்கை அடைவதற்கு சுமாா் 39 கி. மீ. தொலைவில் நடுக் கடலில் தீப்பிடித்து எரிந்தது.
இக்கோர விபத்தில் 43 போ் மட்டுமே அதிருஷ்டவசமாக உயிா் தப்பிய நிலையில், மாயமான மேலும் 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியவராத நிலையில், சரக்கு வைப்பறையில் ஏற்பட்ட வெடிவிபத்தே காரணமாக இருக்கலாம் என உயிா் தப்பியவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று பலமாக வீசியதாலும், மழையிலிருந்து பாதுகாப்பதற்காகப் படகின் திறந்தவெளிகளில் தாா்ப்பாய் கட்டப்பட்டிருந்ததாலும் தீ மளமளவெனப் பரவியுள்ளது.

