சச்சினை முந்திய கில்... ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த டாப்-10 இந்திய வீரர்கள்
Read at Daily Thanthi1 outlet covered this
சச்சினை முந்திய கில்... ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த டாப்-10 இந்திய வீரர்கள்
How outlets told it

Published on: 11 Sep 2026, 7:28 amமும்பை, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த டாப்-10 இந்திய வீரர்களை தற்போது காண்போம். கில் முதலிடம்இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அபாரமாக விளையாடிய கில், முதல் இன்னிங்சில் 269 ரன்களும், 2-வது இன்னிங்சில் 161 ரன்களும் விளாசினார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் மொத்தம் 430 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.54 ஆண்டுகால சாதனை முறியடிப்புஇதற்கு முன்பு இந்த பட்டியலில் 344 ரன்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருந்தார். 1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில் கவாஸ்கர் முதல் இன்னிங்சில் 124 ரன்களும், 2-வது இன்னிங்சில் 220 ரன்களும் சேர்த்து மொத்தம் 344 ரன்கள் குவித்திருந்தார். சுமார் 54 ஆண்டுகளாக நீடித்த இந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். மற்ற வீரர்கள்வி. வி. எஸ். லக்சுமண் 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 59 மற்றும் 281 ரன்கள் (மொத்தம் 340 ரன்கள்) அடித்தார். சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூரு டெஸ்டில் 239 மற்றும் 91 ரன்கள் (மொத்தம் 330 ரன்கள்) குவித்து 4-வது இடத்தில் உள்ளார். ஒரே இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய வீரரான சேவாக், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 319 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களும் அடித்து இப்பட்டியலில் முறையே 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளார். 1. சுப்மன் கில் - 430 ரன்கள் (269, 161) - இங்கிலாந்து 2. சுனில் கவாஸ்கர் - 344 ரன்கள் (124, 220) - மேற்கிந்தியத் தீவுகள் 3. வி. வி. எஸ். லக்சுமண் - 340 ரன்கள் (59, 281) - ஆஸ்திரேலியா 4. சௌரவ் கங்குலி - 330 ரன்கள் (239, 91) - பாகிஸ்தான் 5. வீரேந்தர் சேவாக் - 319 ரன்கள் (319) - தென் ஆப்பிரிக்கா 6. வீரேந்தர் சேவாக் - 309 ரன்கள் (309) - பாகிஸ்தான் 7. ராகுல் டிராவிட் - 305 ரன்கள் (233, 72) - ஆஸ்திரேலியா 8. கருண் நாயர் / ரோகித் சர்மா - 303 ரன்கள் (இங்கிலாந்து / தென் ஆப்பிரிக்கா) 9. சச்சின் டெண்டுல்கர் - 301 ரன்கள் (241, 60) - ஆஸ்திரேலியா 10. ராகுல் டிராவிட் - 295 ரன்கள் (222, 73) - நியூசிலாந்து
