டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டணம் பல மடங்கு உயர்வு
Read at The Hindu TamilBusiness · 1 outlet covered this
டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டணம் பல மடங்கு உயர்வு
How outlets told it

புதுடெல்லி: டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள், பிரதிநிதிகள், அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக 5 நட்சத்திர ஓட்டல்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனால், சில ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் பல லட்சங்களாக அதிகரித்தது. இணையதளத்தில் தேடியபோது, டெல்லி லீலா பேலஸில் ஒரு அறைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.6.2 லட்சம், ஐடிசி மவுரியாவில் ரூ.2.5 லட்சம், தி லோதியில் ரூ.1.2 லட்சம், லீ மெரிடியனில் ரூ.1 லட்சம் வரை உயர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.
இமாச்சலில் 24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் செய்து அசத்திய 72 வயது முதியவர்
