World · 3 outlets covered this

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடி

How outlets told it

Dinamalar6535h ago

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடி

Read at Dinamalar
Daily Thanthi9931h ago

நெதன்யாகுவின் சிகை அலங்காரத்திற்கு பல கோடிகளை செலவு செய்த இஸ்ரேல் அரசு

Read at Daily Thanthi
News18 Tamil6527h ago

பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப் உள்ளிட்ட செலவு 4.5 கோடி ரூபாய்.. இஸ்ரேல் அரசு அறிவிப்பு

Read at News18 Tamil
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடி
Photo: Dinamalar

/செய்திகள்/உலகம்/ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடிADDED : செப் 13, 2026 04:55 AM ADDED : செப் 13, 2026 04:55 AM அ நிறம் | அளவுஜெருசலேம்: கடந்த 2019 முதல், 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக 4.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷலித், கடந்த 2025 டிசம்பரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான செலவுகள் குறித்து கேட்டிருந்தார். இதையடுத்து, இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம், மாதம் வாரியான விரிவான செலவு விபரங்களை வழங்கியுள்ளது. அதன்படி, 2019ம் ஆண்டு தொடக்கம் முதல், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தங்கள் பிரதமர்களுக்கான சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக 4.49 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மொத்த செலவுகளில் 90 சதவீதம், அதாவது, 4.04 கோடி ரூபாய் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோருக்கே செலவிடப்பட்டு உள்ளது.