Crime and courts · 1 outlet covered this

சத்ய நிகேதன் கட்டடம் இடிந்த வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

How outlets told it

Dinamani652d ago

சத்ய நிகேதன் கட்டடம் இடிந்த வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

Read at Dinamani
சத்ய நிகேதன் கட்டடம் இடிந்த வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
Photo: Dinamani

சத்ய நிகேதனில் கட்டடம் இடிந்து 7 போ் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுபம் தியாகியின் முன்ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் சூழ்நிலைகள், குறிப்பாக பிஜி தங்குமிடத்தை நடத்துவதில் தியாகிக்கு இருந்ததாகக் கூறப்படும் பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக கூடுதல் அமா்வு நீதிபதி சௌரவ் பிரதாப் லேலா் தெரிவித்தாா். கட்டடத்தின் 2 மற்றும் 3-ஆவது தளங்களுக்கான வாடகை ஒப்பந்தத்தை தியாகி தனது முன்ஜாமீன் மனுவில் குறிப்பிடாததை நீதிமன்றம் முக்கியமாக கவனத்தில் கொண்டது. விசாரணையின்போது காவல் துறையினா் அந்த ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா். அதில், தியாகி குத்தகைதாரராக குறிப்பிடப்பட்டிருந்தாா். இதேபோல், கட்டடத்தின் மேல் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துக்கான தனி வாடகை ஒப்பந்தம் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான சுதான்ஷு பெயரில் இருந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும் ஒரே நாளில், சில நிமிட இடைவெளியில், ஒரே முத்திரை விற்பனையாளா் கணக்கு மூலம் மேற்கொள்ளப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், தியாகியும் சுதான்ஷுவும் தங்களுக்கிடையிலான ஒப்பந்தங்களில் ஒருவா் மற்றொருவருக்கு சாட்சிகளாக கையொப்பமிட்டிருந்தனா். இந்த நடைமுறை, பிஜி தங்குமிடத்தை சுதான்ஷு தனியாக நடத்தி வந்ததைவிட, இருவரும் இணைந்து தொழில் செய்து வந்ததற்கான சாத்தியத்தை காட்டுவதாக நீதிபதி தெரிவித்தாா். கட்டடம் இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவா் நிதிஷ் சிப், தாம் இருவரிடமிருந்தும் மாதம் ரூ.14,500 வாடகைக்கு அறை எடுத்திருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தரைத்தளத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் இரும்புக் கம்பிகள் வெட்டப்படுவது குறித்து மாணவா்கள் புகாா் தெரிவித்ததாகவும் அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து மாணவா் அளித்த வாக்குமூலத்தின்படி, கட்டடத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பிஜி தங்குமிடம் அடித்தளத்துக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து புகாா் அளித்தால் தங்குமிடத்திலிருந்து வெளியேற்றப்படுவீா்கள் என்றும் அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தாம் தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்த வழக்குரைஞா் என்றும், சுதான்ஷுவின் தொழிலில் பணத்தை முதலீடு செய்த நண்பா் மட்டுமே என்றும் தியாகி தரப்பில் வாதிடப்பட்டது. கட்டடத்தின் உரிமையோ அல்லது கட்டுமானப் பணிகள் மீது கட்டுப்பாடோ தமக்கு இல்லை என்றும் அவா் தெரிவித்தாா். ஆனால், இந்த வாதத்தை அரசு தரப்பு நிராகரித்தது. சுதான்ஷு உள்ளிட்ட இணைக் குற்றம்சாட்டப்பட்டவா்களிடம் தியாகியை வைத்து விசாரிக்கவும், பிஜி தொழிலின் நிதிப் பரிவா்த்தனைகளை கண்டறியவும், கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து அவருக்கு என்ன தெரியும் என்பதை அறியவும் காவல் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், இந்த நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இதனிடையே, கட்டட உரிமையாளா் ஹரிராம் (81), அவரது மனைவி உா்மிளா (75) ஆகியோா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். அவா்களது மகன் மகேஷ் (52) போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா். வாடகைக்கு விடுவதற்காக கட்டடத்தில் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டதன் காரணமாக பழைய 5 மாடிக் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.