School Holiday: தொடர் 4 நாள் விடுமுறை... பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - எதற்காக தெரியுமா?
Read at News18 TamilEducation and jobs · 2 outlets covered this
School Holiday: தொடர் 4 நாள் விடுமுறை... பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - எதற்காக தெரியுமா?
How outlets told it
Two boys bid to kill hostel mate for school holiday in AP
Read at The New Indian Express
1/3ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா நாளை (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்த உள்ளனர்.2/3குருபூஜை விழாவையொட்டி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளை இன்றும் நாளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.3/3அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழடி அருங்காட்சியகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 11) வெள்ளிக்கிழமை என்பதால், அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும், செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையும் வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

