Science and tech · 2 outlets covered this

செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் இருந்து விலகிய ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்..

How outlets told it

Polimer News1004d ago

செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் இருந்து விலகிய ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்..

Read at Polimer News
BBC News Tamil463d ago

காணொளி: பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொல்லப் போகிறதா?

Read at BBC News Tamil
செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் இருந்து விலகிய ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்..
Photo: Polimer News

முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்-கில் இருந்து விலகிய ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்ஸன் ((Jacob Coxon)), வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலம் முழுவதையும் அழித்துவிடக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.  ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை என்றும் அவை 'சூப்பர்இன்டெலிஜென்ஸ்' ((Superintelligence)) திறனை நோக்கி கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும் விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் ஊடகங்களுக்கு முன்னால் எதையும் சாதாரணமாகப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் ஏஐ-ன் அபரிமிதமான வளர்ச்சி குறித்து கடுமையான பயத்தில் இருக்கிறார்கள் என்று ஜேக்கப் காக்ஸன் கூறியுள்ளார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையை ஏஐ எட்டுவதற்கு முன்பு ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.