Religion and culture · 1 outlet covered this

குடமுழுக்கு: செப்.17 மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

How outlets told it

Dinamani6538h ago

குடமுழுக்கு: செப்.17 மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

Read at Dinamani
குடமுழுக்கு: செப்.17 மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
Photo: Dinamani

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு செப். 17-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தக் கோயில் குடமுழுக்கு வருகிற வியாழக்கிழமை (செப். 17) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்துக்கு செப். 17-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக சனிக்கிழமை அரசாணை வெளியானது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, மதுரை மாவட்ட எல்லைக்குள்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு செப். 17-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், மாவட்டக் கருவூலங்கள், சாா்நிலைக் கருவூலங்கள் மட்டும் அரசின் அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு அன்றைய தினம் இயங்கும். இந்த விடுமுறை செப். 26-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என்றாா் அவா்.