Politics · 2 outlets covered this

இந்தியாவின் கல்வி அமைப்பை சீரமைக்க வேண்டும்; ராகுல் காந்தி

How outlets told it

Daily Thanthi992d ago

இந்தியாவின் கல்வி அமைப்பை சீரமைக்க வேண்டும்; ராகுல் காந்தி

Read at Daily Thanthi
Dinamani6537h ago

பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்திய - நேபாள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Read at Dinamani
இந்தியாவின் கல்வி அமைப்பை சீரமைக்க வேண்டும்; ராகுல் காந்தி
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 1:04 amஇந்தியாவின் கல்வி அமைப்பு இளம் தலைமு றையினரை தோற்கடித்து இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘வினாத்தாள் கசிவுகள், தாங்க முடியாத கட்டணம், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு என இந்தியாவின் கல்வி முறை, அது மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தலைமுறையையே கைவிட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளம் இந்தியர்கள் நேர்மையாக உழைக்கிறார்கள், ஆனாலும் இந்த கல்வி முறை அவர்களை கைவிடுகிறது' என சாடியுள்ளார். கல்வி அமைப்பை சரிசெய்வது, அதன் தோல்விகளை ஒவ்வொரு நாளும் அனுபவிப்பவர்களின் பேச்சை கேட்பதில் இருந்து தொடங்குவதாக கூறி யுள்ள ராகுல் காந்தி, இந்த கல்வி அமைப்பின் மீது நீங்கள் ஏன் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள்? என்பதை மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியர்களே சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். அத்துடன் அதை சரி செய்வதற்கான யோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.