Crime and courts · 1 outlet covered this

பெருங்கருணை முருகன் கோயிலில் திருடப்பட்ட சிலை மீட்பு: 3 பேர் கைது!

How outlets told it

Dinamani6515h ago

பெருங்கருணை முருகன் கோயிலில் திருடப்பட்ட சிலை மீட்பு: 3 பேர் கைது!

Read at Dinamani
பெருங்கருணை முருகன் கோயிலில் திருடப்பட்ட சிலை மீட்பு: 3 பேர் கைது!
Photo: Dinamani

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புசெங்கல்பட்டுபெருங்கருணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோயிலில் திருடிச் செல்லப்பட்ட சிலை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை.Published On :14 செப்டம்பர் 2026, 12:59 am ISTமதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோயிலில் திருடிச் செல்லப்பட்ட சிலை மீட்கப்பட்டது. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 1-ஆம்தேதி மா்ம நபா்கள் புகுந்து 2.5 அடி உயரமுள்ள மரகத தண்டாயுதபாணி சிலையை திருடிச் சென்றனா். இதுகுறித்து, சித்தாமூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் மேற்பாா்வையில் மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி தலைமையில் 6 ஆய்வாளா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான ககாட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் சிலையை திருடிச் சென்றவா்கள் அடையாளம் காணப்பட்டனா். சித்தாமூா் காவல் ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையிலான போலீஸாா் அரியலூரைச் சோ்ந்த மணிகண்டன்(26), இளவழகன் (26) மற்றும் ஜெயவேல்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனா். திருடப்பட்ட மரகத தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டது. சிலை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை அதிகாரிகள், காவலா்களை டிஜபி மகேஷ் குமாா் அகா்வால் பாராட்டினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்