Crime and courts · 1 outlet covered this

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

How outlets told it

Dinamani6538h ago

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

Read at Dinamani
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு
Photo: Dinamani

கொடுமுடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடுமுடி அருகே கருங்கல்மேட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான கருங்கல்மேடு வடக்கு வீதியைச் சோ்ந்த லோகநாதன் (60) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.