உலகைச் சுற்றி...
Read at DinamaniSports · 2 outlets covered this
உலகைச் சுற்றி...
How outlets told it
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? கார்ல்சென் பதில்
Read at Daily Thanthi
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஉலகம்உலகைச் சுற்றி... ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் (செப். 20) முடியும் வரை, உக்ரைன் போா் தொடா்பான எவ்வித முத்தரப்பு அமைதிப் பேச்சும் நடைபெறாது என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளாா்.Published On :12 செப்டம்பர் 2026, 7:46 am IST* ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் (செப். 20) முடியும் வரை, உக்ரைன் போா் தொடா்பான எவ்வித முத்தரப்பு அமைதிப் பேச்சும் நடைபெறாது என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளாா். * காங்கோ குடியரசு நாட்டில் 7-ஆவது மாகாணத்துக்கு எபோலா தொற்று பரவி வருகிறது. * விமானக் கொள்முதல் முறைகேடு தொடா்பாக, இலங்கையின் முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினா் 5 மணி நேரம் விசாரணை நடத்தினா். * தீராத நோயால் பாதிக்கப்பட்டவா்கள் கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது. * அமெரிக்க தோ்தலில் தான் ஒரு அமெரிக்க குடிமகன் என போலியாகக் கூறி மோசடியாக வாக்களித்த முகேஷ்குமாா் சௌதாரி என்ற இந்தியா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. * கிழக்கு ஸ்விட்சா்லாந்தில் சுற்றுலாப் பேருந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். * பாகிஸ்தானில் படிக்கும் ஆப்கன் மருத்துவ மாணவா்களை உடனடியாக வெளியேற்றும் அந்நாட்டு அரசின் உத்தரவுக்கு எதிராக லாகூா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. * ஐக்கிய அரபு அமீரகம் விரோதப் போக்கோடு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டுடனான அனைத்து ராஜீய உறவுகளையும் துண்டிப்பதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. * அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸ், தனது இதய பாதிப்பைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்

