சேலம், நாமக்கல் வழியாக சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
சேலம், நாமக்கல் வழியாக சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில்
How outlets told it

சேலம், நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பண்டிகை காலங்களில் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது.
அந்தவகையில், சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா் வழியாக மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இதேபோல, மதுரை-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 17 ஆம் தேதி மதுரையில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, கரூா், நாமக்கல், சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
