Science and tech · 1 outlet covered this

உங்கள் ஆதாரை பயன்படுத்தி மற்றவர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளார்களா? கண்டுபிடிப்பது எப்படி?

How outlets told it

News18 Tamil6521h ago

உங்கள் ஆதாரை பயன்படுத்தி மற்றவர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளார்களா? கண்டுபிடிப்பது எப்படி?

Read at News18 Tamil
உங்கள் ஆதாரை பயன்படுத்தி மற்றவர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளார்களா? கண்டுபிடிப்பது எப்படி?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஉங்கள் ஆதாரை பயன்படுத்தி மற்றவர்கள் சிம் கார்டு வாங்கியுள்ளார்களா? கண்டுபிடிப்பது எப்படி?Published by:MusthakLast Updated:Sep 13, 2026 7:32 PM ISTமொபைல் எண்கள் வங்கிச் கணக்குகள், UPI மற்றும் சமூக வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அறிமுகமில்லாத சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருப்பது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும்.1/6ஒருவரின் அடையாள ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களைப் பயன்படுத்தி அவருக்குத் தெரியாமலேயே புதிய மொபைல் இணைப்புகளை (SIM Cards) சிலர் தவறாகப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது பெயரிலும் அடையாளச் சான்றிலும் அதிகபட்சமாக 9 மொபைல் இணைப்புகள் வரை வைத்திருக்க முடியும்.2/6ஆனால், போலியான ஆவணங்கள் மூலம் பெறப்படும் சிம் கார்டுகள் மோசடிகள், மிரட்டல் அழைப்புகள் அல்லது நிதி தொடர்பான குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால், நமது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயல்படுகின்றன என்பதைத் தொடர்ந்து சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.3/6இத்தகைய அடையாளத் திருட்டு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் செயல்படும் TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) என்ற சிறப்புச் சேவை மூலம், குடிமக்கள் தங்கள் பெயரில் வழங்கப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களின் பட்டியலையும் மிக எளிதாகக் கண்டறிய முடியும்.4/6சஞ்சார் சாதி (sanchar-saathi) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று TAFCOP பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு உங்களின் தற்போதைய 10 இலக்க மொபைல் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டைச் (Captcha) சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் கைபேசிக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) உள்ளீடு செய்தவுடன், உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களின் பட்டியல் திரையில் தோன்றும்.5/6இந்தப் பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத, உங்களுக்குத் தெரியாத அல்லது பழைய எண்கள் ஏதேனும் இருந்தால், அதை உடனடியாகப் புகாரளிக்கலாம். திரையில் உள்ள ‘Not my number’ (இது எனது எண் அல்ல) அல்லது ‘Not required’ (தேவையில்லை) ஆகிய விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனிலேயே கோரிக்கை அனுப்பலாம். இதன் மூலம் அந்த எண்கள் மீது தொலைத்தொடர்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.6/6இன்றைய சூழலில் மொபைல் எண்கள் வங்கிச் கணக்குகள், UPI மற்றும் சமூக வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அறிமுகமில்லாத சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருப்பது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இதைக் கட்டுப்படுத்த அரசு டிஜிட்டல் KYC மற்றும் பயோமெட்ரிக் e-KYC முறைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், செயலிழந்த ஒரு மொபைல் எண் 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் மீண்டும் வழங்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் அரசு அமல்படுத்தியுள்ளது.