Education and jobs · 2 outlets covered this

இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினருக்கு துரோகம் இழைக்கிறது - ராகுல் காந்தி

How outlets told it

Daily Thanthi993d ago

இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினருக்கு துரோகம் இழைக்கிறது - ராகுல் காந்தி

Read at Daily Thanthi
Dinamani652d ago

இந்திய கல்வி முறை இளம் தலைமுறையினரை தோல்வியடையச் செய்து வருகிறது: ராகுல்

Read at Dinamani
இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினருக்கு துரோகம் இழைக்கிறது - ராகுல் காந்தி
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 9:57 amபுதுடெல்லி, இந்தியாவின் கல்வி முறை, எந்தத் தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அதே தலைமுறைக்கு தோல்வியைத் தருவதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கட்டண உயர்வுஇதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-இந்தியாவின் கல்வி அமைப்பு, எந்தத் தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அந்தத் தலைமுறையையே கைவிடுகிறது. தேர்வு வினாத்தாள்கள் கசிவது, தாங்க முடியாத கட்டணங்கள், சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள் என பல சிக்கல்கள். லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் நேர்மையாக உழைத்தாலும், இந்த அமைப்பு அவர்களை ஏமாற்றவே செய்கிறது. ஆலோசனைகளை பகிருங்கள்இக்குறைகளை சரிசெய்வதற்கான முதல் படி, நாள்தோறும் இந்த சிக்கல்களை எதிர்கொள்பவர்களின் கருத்துகளுக்கு செவிமடுப்பதே ஆகும். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே... கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை நீங்கள் ஏன் இழந்துவிட்டீர்கள்?கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக உங்கள் அனுபவங்கள், ஆதாரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் லிங்க் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். ஐந்தாவது நிகழ்வுமத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற தனது முன்னெடுப்பின் ஐந்தாவது நிகழ்வுக்கு முன்னதாகவே காங்கிரஸ் தலைவரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. கல்வி முறையை மாற்றுவதற்கு நாட்டின் ஒவ்வொரு மாணவரின் குரலையும் கேட்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ் மற்றும் புனே ஆகிய இடங்களில் ராகுல் காந்தி ஏற்கனவே நான்கு 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இதில் கடைசியாக ஆகஸ்ட் 22ம் தேதி அன்று புனேவில் நடைபெற்ற நிகழ்வு மாணவிகளுக்காக நடத்தப்பட்டது.India's education system is failing the very generation it was meant to lift.Paper leaks. Crushing fees. Decaying infrastructure. Millions of young Indians work honestly, and the system still lets them down.Fixing it begins with listening to those who experience its failures… https://t.co/SqAATIbe9z— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2026