Religion and culture · 1 outlet covered this

மதுரையின் மண்ணோடு சாலமன் பாப்பையா நினைவு நிலைத்திருக்கும்! பழனிவேல் தியாகராஜன்

How outlets told it

Dinamani652d ago

மதுரையின் மண்ணோடு சாலமன் பாப்பையா நினைவு நிலைத்திருக்கும்! பழனிவேல் தியாகராஜன்

Read at Dinamani
மதுரையின் மண்ணோடு சாலமன் பாப்பையா நினைவு நிலைத்திருக்கும்! பழனிவேல் தியாகராஜன்
Photo: Dinamani

மதுரையின் மண்ணோடும் மக்களோடும் சாலமன் பாப்பையாவின் நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் நேற்று காலமனார். அவருக்கு வயது 90. இன்று மதுரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன. உடல்நலக் குறைவால் சில நாள்களாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாலமன் பாப்பையா, சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு ஏராளமான தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கும் இரங்கலில், தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர். அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.