1 outlet covered this

சீன அதிபருக்காக துவக்க உரையை சற்று நிறுத்திய பிரதமர் மோடி

How outlets told it

Dinamalar6523h ago

சீன அதிபருக்காக துவக்க உரையை சற்று நிறுத்திய பிரதமர் மோடி

Read at Dinamalar
சீன அதிபருக்காக துவக்க உரையை சற்று நிறுத்திய பிரதமர் மோடி
Photo: Dinamalar

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டின் போது சீன அதிபர் ஓரிரு நொடிகள் அசவுகரியமாக இருந்ததால், பிரதமர் மோடி தனது துவக்க உரையை நிறுத்தினார். அவரிடம் விசாரித்த பிறகே மீண்டும் பேச துவங்கினார். இந்தியா , சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நேற்று( செப்.,12) துவங்கி இன்று நிறைவு பெற்றது. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரத மண்டபத்தில் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி துவக்க உரை ஆற்றினார். அப்போது ஷி ஜின்பிங் அசவுகரியம் ஏற்பட்டது போல் அமர்ந்திருந்தார். இதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. இதனை கவனித்த பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தினார். சீன அதிபரிடம், '' சரியாக இருக்கிறதா '' என விசாரித்தார். அனை ஷி ஜின்பிங் கவனிக்கவில்லை. அவரது மொழி பெயர்ப்பாளரிடமும் கேட்டார். இதன் பிறகு பிரச்னைஏதும் இல்லை என்பது போல் ஷி ஜின்பிங் தலையசைக்க, மோடி தனது உரையை தொடர்ந்தார்.