மாலுமிகள் பாதுகாப்பு, தடையற்ற கப்பல் போக்குவரத்து; ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Read at Daily ThanthiCivic issues · 1 outlet covered this
மாலுமிகள் பாதுகாப்பு, தடையற்ற கப்பல் போக்குவரத்து; ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
How outlets told it

பிரதமர் மோடி வலியுறுத்தல்Published on: 12 Sep 2026, 12:28 amபுதுடெல்லி, டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளால் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் 20 சதவீத பங்கை கொண்ட ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் கப்பல் போக்குவ ரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தையின் போது இப்பிராந்தி யத்தில் அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச கடல் வழித்தடங்களில் தடையற்ற கப்பல் போக் குவரத்து சுதந்திரம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடி வலி யுறுத்தினார். மேலும், மேற்கு ஆசிய மோதல்களைப் போரால் தீர்க்க முடியாது என்றும், பேச்சு வார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் மோடி சுட்டிக்காட்டி னார். இதற்கு பதிலளித்த ஈரான் அதிபர் பெஜெஷ்கியான், போரை தவிர்த்து அமைதி திரும்ப இந்தியா தனது சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி உதவ வேண்டும் என்று மோடியிடம் கேட்டுக்கொண்டார். சவாலான சூழலிலும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான் தொடர்ந்து ஒத்து ழைப்பு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். கடந்த 2 வாரங்களில் இரண்டாவது முறையாக சந்தித்த இரு தலைவர்களும், இந்தியா-ஈரான் உறவுகள் குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
