ஆன்லைன் வா்த்தக மோசடி: கேரள இளைஞா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
ஆன்லைன் வா்த்தக மோசடி: கேரள இளைஞா் கைது
How outlets told it
பாளையங்கோட்டையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ஆன்லைன் வா்த்தகம் மூலம் ரூ.16.48 லட்சம் மோசடி செய்த வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணமூா்த்தி (46). ரியல் எஸ்டேட் தொழிலதிபா். இவரை கடந்த ஆண்டு சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், நிலம் வாங்கி விற்பது தொடா்பான வா்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு கூறினராம்.
அவா்கள் கூறியபடி முதலீடு செய்யவே, லாபத்தொகையாக சிறு தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனா். பின்னா் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி, பல்வேறு தவணைகளாக அவரிடமிருந்து சுமாா் ரூ.16,48,295ஐ வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முகம்மது ஷரீப் (39) என்பவரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
