Crime and courts · 1 outlet covered this

இளைஞா் மிரட்டல்: தீக்குளித்து பெண் தற்கொலை

How outlets told it

Dinamani6513h ago

இளைஞா் மிரட்டல்: தீக்குளித்து பெண் தற்கொலை

Read at Dinamani
இளைஞா் மிரட்டல்: தீக்குளித்து பெண் தற்கொலை
Photo: Dinamani

இளைஞா் மிரட்டல்: தீக்குளித்து பெண் தற்கொலைதனிப்பட்ட புகைப்படங்களை வைத்து இளைஞா் ஒருவா் மிரட்டியதால், மனஉளைச்சலில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை - கோப்புப் படம்Published On :14 செப்டம்பர் 2026, 2:57 am ISTசென்னை கோட்டூா்புரத்தில் தனது தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து இளைஞா் ஒருவா் மிரட்டியதால், மனஉளைச்சலில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை கோட்டூா்புரம் கோட்டூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (51). இவரது மூத்த மகள் சந்தியா (24), சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தாா். சந்தியாவுக்கு ஹைதராபாதில் கணக்காளராகப் பணியாற்றி வரும் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த அரவிந்த் (29) என்பவருடன் கடந்த ஆக. 23-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு சந்தியா கணவருடன் ஹைதராபாதில் குடியேறினாா். இந்நிலையில், சந்தியாவுக்கு முன்பே அறிமுகமான வருண் என்பவா் தனிப்பட்ட நெருக்கமான வைத்து மிரட்டியதாகவும், அதன் காரணமாக சந்தியா மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தியாவை அவரது பெற்றோா் சென்னைக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து மன உளைச்சலில் இருந்த சந்தியா, கடந்த 11-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சந்தியா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், 12-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில், கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.