Politics · 1 outlet covered this

உணவிலும் அரசியல் செய்யும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜூ கண்டனம்

How outlets told it

Dinamalar6522h ago

உணவிலும் அரசியல் செய்யும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜூ கண்டனம்

Read at Dinamalar
உணவிலும் அரசியல் செய்யும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜூ கண்டனம்
Photo: Dinamalar

ADDED : செப் 13, 2026 05:50 PM ADDED : செப் 13, 2026 05:50 PM அ நிறம் | அளவுபுதுடில்லி: காங்கிரஸ் கட்சி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவிலும் அரசியல் செய்து வருகிறது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார். டில்லியில் நேற்று துவங்கிய பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் நேற்று தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள பிராந்தி ய உணவுகளை வகைப்படுத்தும் வகையில் சைவ உணவுகள் மெனு பட்டியலில் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:தகவலுக்காக : 80 சதவீத இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள். இந்தியாவின் அசைவ உணவு மிகவும் சுவையானது. எனது சகோதரியின் சோலே பத்துரே( வட மாநிலங்களில் பிரபலமான உணவு) அப்படித்தான். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுப்பட்டியலிலும், காங்கிரஸ் அரசியல் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. பல்வேறு பிராந்திய மரபுகளைக் கொண்ட சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த இந்திய சைவ உணவுகளை நமது விருந்தினர்கள் மிகவும் ரசித்து சாப்பிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

உணவிலும் அரசியல் செய்யும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜூ கண்டனம் · Snashd