மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!
Read at DinamaniCinema and entertainment · 3 outlets covered this
மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!
How outlets told it
“லோகா” படத்தின் வசூல் சாதனையை முறியடித்த “பெத்லகேம் குடும்ப யூனிட்”
Read at Daily Thanthiமலையாள திரையுலகிலேயே அதிக வசூல்: ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ சாதனை
Read at The Hindu Tamil
மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!நிவின் பாலி நடித்த பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.
நிவின் பாலி / மமிதா பைஜூPublished On :11 செப்டம்பர் 2026, 10:42 pm ISTநடிகர் நிவின் பாலி நடித்த பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது. இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக .21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. கதாநாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது. ஓணம் பண்டிகையன்று வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், மோகன்லாலின் எம்புரான், துடரும் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ள இப்படம் மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. கேரளத்தில் இதற்கு முன்பு அதிக வசூல் செய்த படங்களான லோகா, வாழ 2 படங்களின் வசூலை பெத்லகேம் குடும்ப யூனிட் முறியடித்துள்ளது. கேரளத்தில் மட்டும் 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் 288 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ள நிலையில், மலையாளத் திரைப்படங்கள் தொடர்ந்து இதுபோன்ற வெற்றிகளைப் பெறுவது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.SummaryBethlehem Family Unit tops the Malayalam film industry with record-breaking box officeபின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


