பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்!
Read at DinamaniPolitics · 1 outlet covered this
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்!
How outlets told it

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு சனிக்கிழமை (செப். 12) கண்டனம் தெரிவித்தது. உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் இன்று முதல் இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் தில்லி பிரகடனம் உலகத் தலைவர்களால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டித்துள்ளன. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை முழுவதுமாக தகர்த்தெறிய வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியது. அந்தப் பிரகடனமானது, உலகளாவிய பயங்கரவாதம், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள், இணையவழி மோசடி மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
