Religion and culture · 1 outlet covered this

Solomon Papaiya | பி.டி.ஆர்.-க்காக கையெழுத்திட்ட சாலமன் பாப்பையா! – முன்னாள் அமைச்சர் பகிர்ந்த நினைவு

How outlets told it

News18 Tamil652d ago

Solomon Papaiya | பி.டி.ஆர்.-க்காக கையெழுத்திட்ட சாலமன் பாப்பையா! – முன்னாள் அமைச்சர் பகிர்ந்த நினைவு

Read at News18 Tamil
Solomon Papaiya | பி.டி.ஆர்.-க்காக கையெழுத்திட்ட சாலமன் பாப்பையா! – முன்னாள் அமைச்சர் பகிர்ந்த நினைவு
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 11, 2026 5:53 PM ISTபேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார். முன்னாள் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், சாலமன் பாப்பையா தனக்காக கையெழுத்திட்டதை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்தார்.1/6பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் முக்கிய நிகழ்வை நினைவுகூர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.2/6மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார்.3/6எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.4/6சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், ”பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.5/6தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.6/6இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், “தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர். அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.