சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டுகள் சிறை
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டுகள் சிறை
How outlets told it

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா், நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட ஈஸ்வரன் கோயில் அருகே சட்டவிரோதமாகத் தங்கி பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது மொமினுல் இஸ்லாம் (29), முகமது யூசுப் கான் (32), அஞ்சனா காதுன் (26), முகமது மகாபு ரஹ்மான் (32), முகமது ரஹிம் மொல்லா (34), மசூத் ராணா (32), முகமது மசூத் ராணா (39) ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் எஸ். சி., எஸ். டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 7 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூங்கொடி ஆஜரானாா்.
