புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 53 ஒப்பந்தப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப். 29 கடைசி நாள்..!
Read at News18 Tamil1 outlet covered this
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 53 ஒப்பந்தப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப். 29 கடைசி நாள்..!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Sneha VijayanPublished by:Muthu KathanLast Updated:Sep 12, 2026 6:49 PM ISTபுதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 53 ஒப்பந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.1/7புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மருத்துவ அலுவலர், செவித்திறன் ஆய்வாளர், சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.2/7இதன்படி, மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கு RTI, திருவரங்குளம் பகுதியில் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.58,000 வழங்கப்படும். மேலும், UHWC-ல் ஒரு மருத்துவ அலுவலர் பணியிடம் உள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.63,000 ஊதியம் வழங்கப்படும்.3/7செவித்திறன் ஆய்வாளர் (Audiologist) பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ.32,000 ஆகும். செவித்திறன் உதவியாளர் (Audiometric Assistant) பணிக்கு ஒரு பணியிடம் உள்ளது. இப்பணிக்கு ரூ.20,000 மாத ஊதியம் வழங்கப்படும்.4/7பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male / HI Grade II) பணிக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.17,500 ஊதியம் வழங்கப்படும். இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Care Provider) பணிக்கு 3 இடங்களும், துணை செவிலியர் (Auxiliary Nursing Midwife) பணிக்கு ஒரு இடமும் உள்ளன. இவற்றுக்கு முறையே ரூ.21,000 மற்றும் ரூ.17,500 மாத ஊதியம் வழங்கப்படும்.5/7நடமாடும் மருத்துவக் குழு வாகன பராமரிப்பாளர் (MMU-Cleaner) பணிக்கு ஒரு காலிப்பணியிடமும், TAEI-MPHW பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ஒரு காலிப்பணியிடமும் உள்ளது. இவ்விரு பணிகளுக்கும் தலா ரூ.11,000 மாத ஊதியம் வழங்கப்படும்.6/7மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஒப்பந்த மாத ஊதியம், காலிப்பணியிட விவரம் உள்ளிட்ட விவரங்களை https://pudukkottai.nic.in என்ற புதுக்கோட்டை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். 10.09.2026 முதல் 29.09.2026 வரை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.7/7மொத்தம் 15 வேலை நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் எனவும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இந்தப் பணிகள் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
