அன்பில் அவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
Read at DinamaniCinema and entertainment · 2 outlets covered this
அன்பில் அவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
How outlets told it
அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்தின் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது
Read at Daily Thanthiவெளியானது கல்லா நிக்குறியே பாடல்!
Read at Dinamaniசெய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்அன்பில் அவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் இன்று வெளியானது. அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன்Published On :11 செப்டம்பர் 2026, 8:54 pm ISTஅன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் இன்று வெளியானது. அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது ’அன்பில் அவன்’ படத்தின் வெளியீடு அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடலான ‘கல்லா நிக்குறியே’ இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.SummaryThe song 'Kalla Nikkuriye' from the movie Anbil Avan was released today. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்

