Cinema and entertainment · 1 outlet covered this

மகேஷ் பாபு, சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

How outlets told it

Daily Thanthi992d ago

மகேஷ் பாபு, சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Read at Daily Thanthi
மகேஷ் பாபு, சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Photo: Daily Thanthi

ராஜமவுலி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்ஐதராபாத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு, வெங்கடேஷ், நடிகை சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் வி. வி. எஸ். லட்சுமணுக்கும் தேர்தல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணம்?வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில விவரங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது, பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களுடன் தற்போதைய வாக்காளர் பட்டியல் தகவல்களை இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.