‘‘உங்க வீடியோவை பாத்துருக்கேன்..” - லண்டனில் விஜய் புகழ்ந்த இந்த பெண் யார் தெரியுமா? | CM Vijay
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
‘‘உங்க வீடியோவை பாத்துருக்கேன்..” - லண்டனில் விஜய் புகழ்ந்த இந்த பெண் யார் தெரியுமா? | CM Vijay
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Khalilullah Snews18-tamilLast Updated:Sep 12, 2026 8:23 PM IST ”உங்க வீடியோவை பார்த்திருக்கிறேன்” என லண்டன் விசிட்டின் போது, தமிழக முதல்வர் விஜய் இன்ஸ்டா இன்ஃபுளூயன்சரை பார்த்து தெரிவித்த வீடியோ வைரல். 1/6தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்.10-ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார். இந்த பயணத்தை முடித்துவிட்டு 17-ம் தேதி சென்னை திரும்புகிறார். முன்னதாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில், உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.2/6இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று லண்டனில் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிட்டார் விஜய். மேலும், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இதனை லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.3/6அதன்படி, லண்டனில் கார் பந்தயம் நடைபெறும் மைதானத்தில் விஜய் - அஜித் சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னதாக சில்வர்ஸ்டோன் ரேஸிங் மைதானத்திற்குப் புறப்பட்ட போது மக்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்தவர்களுடன் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் ஒருவருக்கு கைகொடுத்த விஜய், ‘நான் உங்கள் வீடியோக்களை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்.4/6அதற்கு அந்த பெண், ‘என் வீடியோக்களை பார்த்திருக்கீங்களா?’ என ஆச்சரியமாக கேட்டார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் யார் இந்த இன்புளூயன்ஸர் என்று கேட்டு வருகின்றனர்.5/6இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில், தர்ஷினி லண்டன் டைரீஸ் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சென்னை ஆவடியைச் சேர்ந்த தர்ஷினி லண்டனில் வாழ்ந்து வருகிறார். யூடியூப்பில் 1.1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள இவர், பெரும்பாலும், சாரி, சுடிதார் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.6/6மேலும், லண்டனில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தையும் அவர் நேரில் காண இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவரது வீடியோக்களை முதல்வர் விஜய் பார்ப்பதாக கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
