Cinema and entertainment · 1 outlet covered this

Siragadikka Aasai | வீட்டுக்கு வந்த ரோகிணி.. விஜயா வைத்த செக்.. இன்றைய எபிசோட்.!

How outlets told it

News18 Tamil653d ago

Siragadikka Aasai | வீட்டுக்கு வந்த ரோகிணி.. விஜயா வைத்த செக்.. இன்றைய எபிசோட்.!

Read at News18 Tamil
Siragadikka Aasai | வீட்டுக்கு வந்த ரோகிணி.. விஜயா வைத்த செக்.. இன்றைய எபிசோட்.!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Anupriyam KLast Updated:Sep 11, 2026 10:09 AM ISTSiragadikka Aasai serial | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகிணி வீட்டிற்கு வரவே விஜயா அடுக்கடுக்காக அதிர்ச்சி தகவலை சொல்கிறார்.1/6சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா அம்மா வீட்டிற்கு சென்ற முத்து சத்யா சொன்னதை கூறி நாம் அனைவரும் திருமண வரவேற்பிற்கு செல்லலாம் என்று சொல்கிறார். மேலும் சிந்தாமணி நம்மை அசிங்கப்படுத்த முடியாத அளவிற்கு நாம் ஏதாவது செய்துவிட வேண்டும் எனவும் முடிவெடுக்கின்றனர். இதனால் சந்திராவும் மகனின் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்.2/6தொடர்ந்து மனோஜை கடைக்கு பார்க்க சென்ற ரோகிணி இனி உன்னுடன் தான் இருப்பேன் என கராராக சொல்லிவிடுகிறார். பிறகு மனோஜ் அதெல்லாம் வேண்டாம் நீ உன் வீட்டில் இரு நான் வந்து பார்க்கிறேன் என சொன்னதும், கோர்ட்டுக்கு போய் ஒரு பெட்டிஷன் போடவா என மிரட்டுகிறார். உடனே அச்சமடைந்த மனோஜ் ரோகிணியை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுக்கிறார்.3/6இந்த நிலையில், முத்து சத்யா திருமண வரவேற்பை பற்றி பேசுகிறார். ஒருவழியாக சத்யாவின் விசேஷத்திற்கு போகலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று சொல்லி வந்த விஜயா சிந்தாமணி எப்படி தான் மருமகனை வைத்திருக்கிறார் என்று ஆர்வமாக பார்க்க சரி வாங்க போகலாம். மீனாவின் குடும்பத்திற்காக தான் வருகிறேன் என சொல்லிவிடுகிறார்.4/6பிறகு ரோகிணி - மனோஜ் இருவரும் ஜோடியாக வீட்டிற்கு வரவே அதை பார்த்த பாட்டி விஜயாவையே ஆரத்தி எடுக்க சொல்கிறார். பிறகு கெத்தாக எண்ட்ரி கொடுத்த ரோகிணி அச்சத்துடனே நிற்கிறார். பாட்டியோ நடந்த கதை தெரியாமல் பால், பழம் கொடுக்க சொல்லி விஜயாவை வற்புறுத்துகிறார். ஆனால் முத்து எப்படியோ பாட்டியை சமாளித்துவிட்டு ரூமிற்குள் அனுப்பி வைக்கிறார்.5/6பிறகு ரோகிணியை பார்த்து நீ எதுக்கு டி வந்த என்று விஜயா கேட்க, கோர்ட் சொன்னது என்று ரோகிணியும் திமிறாக சொல்கிறார். பிறகு அனைவரும் நீதிமன்றம் சொன்னதை மறுக்கக்கூடாது என்று சொல்லவே, மீனாவிடம் இனி நீ ரோகிணிக்கு சமைத்து கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். மேலும் தனியாக பாத்திரம் வாங்கி தனியாக குடும்பம் நடத்தி கொள் விரைவில் இதற்கு முடிவு கட்டுகிறேன் என சொல்கிறார்.6/6உடனே ரோகிணியோ பரவாயில்ல ஆண்டி முதலில் வீட்டுக்கு வரக்கூடாதுனு சொன்னீங்க, இப்போ வந்துவிட்டேன் அது மாதிரி மொத்தமா நீங்க எல்லாருமே என்னை மன்னிச்சு ஏத்துக்கிற நாள் வரும் என்று நிச்சயமா நம்புறேன் என சொல்கிறார். அதற்கு விஜயாவோ அது எல்லாம் கனவுல கூட நடக்காது என்று சொல்கிறார். ரோகிணியும் இன்னும் நாட்கள் இருக்கிறது பார்க்கத்தான் போறீங்க என்று சொல்கிறார். இனி என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.