Crime and courts · 1 outlet covered this

இரவு நடுகாட்டில் ஐ.டி பெண் இறக்கிவிட்ட பஸ் சிறைபிடிப்பு.. வழிமறித்து அலறவிட்ட மக்கள்.. “நிப்பாட்டு...நிப்பாட்டு...” பரபரப்பு

How outlets told it

Polimer News1005d ago

இரவு நடுகாட்டில் ஐ.டி பெண் இறக்கிவிட்ட பஸ் சிறைபிடிப்பு.. வழிமறித்து அலறவிட்ட மக்கள்.. “நிப்பாட்டு...நிப்பாட்டு...” பரபரப்பு

Read at Polimer News
இரவு நடுகாட்டில் ஐ.டி பெண் இறக்கிவிட்ட பஸ் சிறைபிடிப்பு.. வழிமறித்து அலறவிட்ட மக்கள்.. “நிப்பாட்டு...நிப்பாட்டு...” பரபரப்பு
Photo: Polimer News

மதுரையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு அரசு பேருந்து வந்துள்ளது. வழக்கமாக இந்த பேருந்து ஆத்தூர், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகனேரிக்கு செல்ல ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளனர். ஆனால், பேருந்து நடத்துனரோ, “இந்த பேருந்து ஆறுமுகனேரி ஊருக்குள் செல்லாது. ஆறுமுகனேரி டோல்கேட் வழியாக புறவழிச்சாலையில் சென்று காயல்பட்டினம்தான் செல்லும். எனவே, ஆத்தூரில் இறங்கிக் கொள்ளுங்கள்” என கூறியதாக தெரிகிறது. இதனால், வேறு வழியில்லாமல் அந்த பயணிகள் ஆத்தூரில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி நியோ டைடல் பார்க்கில் பணிபுரியும் ஐடி பெண் ஊழியர் ஜெனிஷர் மட்டும், தான் ஆறுமுகனேரி செல்வதற்காக டிக்கெட் பெற்றுள்ள நிலையில், ஏன் ஆத்தூரில் இறங்க வேண்டும் என நடத்துனரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு ஆறுமுகனேரிக்கான டிக்கெட்டை வழங்கிவிட்டு, ஆறுமுகனேரி டோல்கேட் அருகே ஊருக்கு மேற்புறம் உள்ள காட்டுப் பகுதியில் இரவு நேரத்தில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகே ஏற்கனவே வழிப்பறி, கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிஷர், உடனடியாக தனது உறவினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது உறவினர்கள், TN 58 N 2368 எண் கொண்ட அரசு பேருந்தை வழிமறித்து “ஒரு பொம்பள புள்ளைய இப்பட இரவுநேரத்துல நடு காட்டுக்குள்ள இறக்கிவிடலாமா? இந்த வழியாக போக ரூல்ஸ் உள்ளதா? உங்களுடைய ரூட் எது?” என கேட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்திற்குப் பின்னர்,   ஐ. டி. பெண்ணையும் அவரது தந்தையையும் அதே அரசு பேருந்தில் பயணிக்கவைத்து, மீண்டும் புறவழிச்சாலையில் இருந்து திரும்பி ஆறுமுகனேரி ஊருக்குள் சென்று பயணிகளை இறக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரங்களில் பெண் மற்றும் இளம் பயணிகளை ஆள்நடமாட்டம் இல்லாத, குற்றச்செயல்கள் நிகழும் காட்டுப் பகுதிகளில் இறக்கிவிடுவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அரசு பேருந்து பணிமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.