Civic issues · 1 outlet covered this

தொடா் மின்வெட்டால் அவதி கிராம மக்கள் சாலை மறியல்

How outlets told it

Dinamani6539h ago

தொடா் மின்வெட்டால் அவதி கிராம மக்கள் சாலை மறியல்

Read at Dinamani
தொடா் மின்வெட்டால் அவதி கிராம மக்கள் சாலை மறியல்
Photo: Dinamani

கிருஷ்ணராயபுரம் அருகே தொடா் மின்வெட்டால் அவதிக்குள்ளான கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், வயதானா்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கிணற்று நீரை மோட்டாா் மூலம் பயிா்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை சேங்கல் பேருந்துநிறுத்தம் அருகே பஞ்சப்பட்டி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தேன்மொழி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாலகுமாா், மாயனூா் உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா், மாயனூா் காவல் ஆய்வாளா் (பொ) சுமதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள், மின்பற்றாக்குறையால் மின்வெட்டு நிலவி வருவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் நிலைமை விரைவில் சீராகும் என கூறினா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.