பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம்
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம்
How outlets told it

Published on: 12 Sep 2026, 1:06 pmடெல்லி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடுபிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தலைமை ஏற்றுள்ள இந்த உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
