கடமலைக்குண்டு அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
Read at Daily Thanthi1 outlet covered this
கடமலைக்குண்டு அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
How outlets told it

Published on: 12 Sep 2026, 6:01 amதேனி, கடமலைக்குண்டு அருகே தேன்பாறை மலை அடிவாரத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், புதிய கற்காலச் சாணைத் தடங்கள் மற்றும் பெருங்கற்கால வழிபாட்டு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள குகைத்தளங்களில் வெண்சாந்தினால் வரையப்பட்ட மனித உருவங்கள், விலங்குகள் மற்றும் வேட்டைச் சடங்குகளை உணர்த்தும் ஓவியங்கள் உள்ளன. பாறையின் சாய்வான பகுதியில் கற்கோடாரிகள், இரும்பு ஆயுதங்களை கூர்மையாக்கப் பயன்படுத்திய 3 சாணைத் தடங்கள் காணப்படுகின்றன. பாறைக்கீறல்மேலும், வழிபாட்டின் போது விளக்கேற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் வட்ட வடிவிலான கப்-மார்க் குடைவுகளும், ஒளிக்கதிர்கள் போன்ற பாறைக்கீறல்களும் உள்ளன. வைகை ஆற்றிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் உள்ள இந்த தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை நிரூபிக்கிறது. வருசநாட்டுப் பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த குகைத்தளங்களை அரசு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
