ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை
Read at DinamaniReligion and culture · 2 outlets covered this
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை
How outlets told it
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பரிசல் இயக்க மீண்டும் தடை
Read at Daily Thanthi
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 4,000 கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 7,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகள் மீண்டும் ஆா்ப்பரிக்கத் தொடங்கியுள்ளன.

