லா லிகா: ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா!
Read at DinamaniSports · 1 outlet covered this
லா லிகா: ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்ற ரபீனியா!
How outlets told it

ஆகஸ்ட் மாதத்தில் லா லிகா தொடரில் மட்டுமே ரபீனியா 5 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். லா லிகா தொடரிலேயே அதிக கோல்கள் அடித்தவராக முன்னேறியுள்ளார். எல்சி அணிக்கு எதிராக 2 கோல்கள், அத்லெடிக் பில்போ உடன் 1, ராயோ வெலான்சியோ உடன் 2 கோல்கள் அடித்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தினால் புள்ளிப் பட்டியலிலும் பார்சிலோனா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பார்சிலோனா வரலாற்றிலேயே முதல் நான்கு போட்டிகளிலும் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரபீனியா நான்காவது இடம் பிடித்துள்ளார். முன்னதாக ரோட்ரிகஸ் (1950/51), குபாலா (1953/54), கயேட்டானோ ரே (1964/65), ஸ்லடான் இப்ரமோவிச் (2009/10), செக் ஃபேப்ரெகெஸ் (2011/12) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்கள். முன்னதாக 2024 ஆகஸ்ட் மாதமும் இந்த விருதினை ரபீனியா வென்றிருந்தார். இது இரண்டாவது முறை என்பதும் கவனிக்கத்தக்கது. பார்சிலோனா வரலாற்றிலேயே லியோனல் மெஸ்ஸி இந்த மாத விருதினை 8 முறையும் லமின் யமால், லூயிஸ் சௌரஸ் தலா 4 முறையும் லெவண்டாவ்ஸ்கி 3 முறையும் வென்றுள்ளார்கள்.
