Civic issues · 1 outlet covered this

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு

How outlets told it

Dinamani6539h ago

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு

Read at Dinamani
திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு
Photo: Dinamani

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சரக்கு வாகனம் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

திம்பம் மலைப் பாதை 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா். விபத்து காரணமாக திம்பம் மலைப் பாதையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்படுச் சென்றன.