"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்
"மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனம். அறியாமையில் இருந்து வெளிவரக்கூடிய கருத்து"- பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தான் சட்டமன்றம் இருக்கும் என்றால் சட்டமன்றமே வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

