கிர்கிஸ்தானில் நடத்தப்பட்ட 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, ஈரான், சீனா, துருக்கி, ரஷ்யா , ஆஸ்திரேலியா என 104 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இசிக்-குல் பிராந்தியத்தின் மலைப்பகுதியில் நடத்தப்பட்ட வில் வித்தை போட்டியில் வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். குதிரையேற்ற வில் வித்தை போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
மத்திய ஆசியாவின் போலோ விளையாட்டு என்று அழைக்கப்படும் குதிரையேற்ற விளையாட்டான கோக்-போருவில் வீரர்கள் போட்டியிட்டனர்.

