‘தி.மு.க., சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி, செப். 6– அமைப்புச் சாரா தொழிலாளர் காங்., புதுச்சேரி தலைவராக பிரபுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைப்புச் சாரா தொழிலாளர் காங்., புதுச்சேரி தலைவராக பிரபுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அமைப்பின் தேசியசெயற்குழு உறுப்பினர் சக்தி சிவகுமார் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், பங்கேற்ற காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது:
தனக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக அடிக்கடி மாநில அந்தஸ்து பிரச்னையை கையில் எடுக்கும் முதல்வர் ரங்கசாமி, மற்றவர்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.


