ரகசிய டீல்! அமெரிக்கா செய்த துரோகம்.. கைவிடப்பட்ட சவுதி.. ஆட்டத்தை கையில் எடுத்த ஈரான்!
செய்தியாளர் - M. மீரா ஏமன் உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஹவுதி படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏமனில
ஏமன் உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஹவுதி படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏமனில் ஹவுதி படைகள் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோகா (Mocha) துறைமுக நகரம், பாப் அல்-மந்தப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரம், செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான மயூன்/பெரிம் தீவையும் கைப்பற்றி அதன்மூலம் சவூதியையும் தாக்கி வருகின்றனர்.
ஹவுதி அமைப்பு செங்கடல் கடற்கரையில் வேகமாக முன்னேறியிருப்பது சவுதி அரேபியாவுக்கு கூடுதல் பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதிக்கும் இது முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த சமயத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாக Reuters தெரிவித்துள்ளது.

