இதே நாளில் அன்று
செப்டம்பர் 5: நாகப்பட்டினத்தில், திருமலை நம்பி அய்யங்கார் -- திருவேங்கடவல்லி அம்மாள் தம்பதியின் மகனாக,
நாகப்பட்டினத்தில், திருமலை நம்பி அய்யங்கார் -- திருவேங்கடவல்லி அம்மாள் தம்பதியின் மகனாக, 1948ல் இதே நாளில் பிறந்தவர், டி.என்.சேஷகோபாலன்.
இவர், சிறு வயதிலேயே தன் தாயிடமும், ராமநாதபுரம் சி.எஸ்.சங்கரசிவனிடமும் இசை பயிற்சி பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., முடித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசை பிரிவில் பட்டம் பெற்று, அங்கு இசை பேராசிரியராக பணியாற்றினார்.
வாய்ப்பாட்டு தவிர வீணை, ஹார்மோனியம் ஆகிய கருவிகளை வாசிப்பதிலும், ஹரிகதா சொல்வதிலும் வல்லவர். இவர் சுயமாகவே, தில்லானா, பஜன், நாமாவளிகளை இயற்றியுள்ளார். ஹிந்துஸ்தானி ராகங்களிலும் தேர்ச்சி பெற்ற இவர், தோடி ராகம் திரைப்படத்தை தயாரித்து, நடித்தார்.




