பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய அலுவலக செயலாளர் சத்தியராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் 16 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
