வக்கீலை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை, காளியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த வக்கீல் கார்த்திகேயன், 28. இவர், மணியனுாரை சேர்ந்த விக்னேஷ், ரமேஷ் ஆகியோரது வழக்குகளை நடத்தி வருகிறார்.
அதற்கு இருவரும், கட்டணம் வழங்கவில்லை. கடந்த, 10 மாலை, விக்னேஷூக்கு போன் செய்து, கார்த்திகேயன் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், மணியனுார் பூங்கா அருகே வரும்படி அழைத்தார். கார்த்திகேயனும் அங்கு சென்றார். அப்போது ஒரு காரில், விக்னேஷ், ரமேஷ், மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்கள், கார்த்திகேயனை காரில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விக்னேஷ், ரமேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

