மூணாறு பாதுகாப்பில் பெண் போலீசார்
மூணாறு: மூணாறில் சட்ட, ஒழுங்கை பாதுகாக்கும் பணிகளை பெண் போலீஸ் அதிகாரிகள் நிர்வாகித்து வருகின்றனர்.
சுற்றுலா நகரான மூணாறில், போலீஸ் ஸ்டேஷன் எல்லை மிகவும் விரிவானது. இது வரை போலீஸ் ஸ்டேஷனை ஆண் போலீஸ் அதிகாரிகள் நிர்வாகித்த நிலையில், முதன்முறையாக பெண் ஒருவர் எஸ்.ஐ., யாக நியமிக்கப்பட்டார். அதன்படி கிருஷ்ணபிரியா எஸ்.ஐ., யாக கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவர் நகரில் போக்குவரத்து நெரிசல், போதை பொருள் நடமாட்டம் உள்பட சட்ட, ஒழுங்கு பிரச்னைகளை கடந்த ஒரு மாதமாக திறம்பட கையாண்டு வருகிறார்.
இந்நிலையில் மூணாறு ஏ.எஸ்.பி., யாக அமிர்தாசதீபன் பொறுப்பேற்றார். திருச்சூர் இருஞாலகுடா பகுதியை சேர்ந்த இவர், 2024ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்றார்.


